லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் வடகிழக்கு மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.பொலியாவில் கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகரின் லா பாஸ்ஸின் வடக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன்போது அதிகளவானர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





