LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

சட்டவிரோதமாக கட்டுத்துவக்கு, வாளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்!

சட்டவிரோதமாக கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில் வைத்திருந்தவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.உடுத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

அதன் போது கசிப்பு, கட்டுத்துவக்கு மற்றும் வாள் என்பவற்றை வீட்டில் இருந்து பொலிஸார் மீட்டனர். அத்துடன் வீட்டில் இருந்தவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் பராப்படுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7