குறித்த பிணை மனுவை அடுத்த வாரம் தாக்கல் செய்யவுள்ளதாக, பிரபல பாடகரான அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோரை பிரதிநிதிப்படுத்தும் சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.
டுபாயில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படும் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 30 பேர் கடந்த 5 ஆம் திகதி அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் நதீமால் பெரேரா போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என, குருதிப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






