பிரெக்ஸிற் மாற்றுத்திட்டத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இந்த வாரம் இடம்பெறாது எனவும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
இவ்வாக்கெடுப்பு பெப்ரவரி இறுதியிலேயே இடம்பெறக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரெக்ஸிற் மாற்றுத்திட்டத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தாலும் அதை உறுதி செய்வதற்காக சட்டமொன்றை நிறைவேற்ற வேண்டியது அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும் தேவையான சட்டத்தை இயற்றுவதற்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுமென பாராளுமன்ற நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இத்தகைய நிலை ஏற்படும் பட்சத்தில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுமென பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.






