பாதிக்கப்பட்ட பயணிகளை பாதுகாக்கும் வகையில் புதிய உரிமம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான ஆலோசனைகளை போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளது.
கடந்த வருடம் அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில், வாடகை வாகன சாரதிகள் நவீன உலகிற்கு பொருத்தமற்றவர்களாகவும், சட்டத்திற்கு கட்டுப்படாதவர்களாகவும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த ஆலோசனைகளில், வாடகை மற்றும் தனியார் வாகனங்களில் சி.சி.ரி.வி கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்று கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும், குற்றச்செயல்கள் இடம்பெறும் பட்சத்தில் எந்தவொரு காணொளி பதிவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்குமாயின் விசாரணைகளை கையாள்வதற்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






