வாகனச் சோதனையில் டார்பி பொலிஸார் ஈடுப்பட்டுக் கொண்டிருந்துபோது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவோர்மீது அதிககவனம் செலுத்தியுள்ளனர். இவ்வாறு ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது மிக ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த வாகனத்தைச் செலுத்திய நபரின் மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு மதுவின் அளவு (அல்கஹால்) கலந்திருப்பது கண்டறியப்பட்டது. சாதாரணமாக இந்த அளவிற்கு ஒருவர் மது அருந்தியிருந்தால் அவரால் நிலையாக நிற்கவோ, அசையவோ முடியாது.
இந்த அளவு என்பது ஒருவருக்கு அனஸ்தீசியா கொடுக்கும் போதோ, அல்லது ஒருவர் கோமா நிலையில் இருக்கும் போதோ ஏற்படும் அசைவற்ற நிலையிலேயே இருப்பார்.
அதாவது, ஒருவர் முற்றும் செயலிழந்து இருக்கும் நிலையாக கருதப்படுகிறது. ஆனால், அவர் சாவகாசமாக வாகனத்தை செலுத்தி வந்திருக்கிறார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டார்பி பொலிஸார் அதன் கீழே 2.0 திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் போஸ்டரைப் பகிர்ந்து, அதில் வரும் ‘இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது’ என்ற வசனத்தையும் பகிர்ந்துள்ளனர்.






