LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தேசிய வர்த்தக கொள்கை ஒன்றுக்கான முக்கிய பண்புகளை வெளியிடுவதற்காக தொழில்வல்லுனர்களின் தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணைக்குழுவிடம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள, தொழில்வல்லுனர்கள் சங்க மத்திய நிலையத்தில் வைத்து இன்று(திங்கட்கிழமை) இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
தொழில்வல்லுனர்கள் தேசிய முன்னணியின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதனியவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
“71 வருட சட்டபூர்வ சுதந்திரத்தின் பின்னர் கொள்கை வகுப்பினூடாக உண்மையான சுதந்திரத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியையும் ஜனாதிபதி இன்று பார்வையிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள், தொழிவல்லுனர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் பொறியியலாளர் கபில பெரேரா உள்ளிட்ட உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7