LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டிய ஜனாதிபதியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமையைப் போன்றே நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு விடுதலைப் புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த யோசனைக்கு கண்டனம் வெளியிட்டு சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இக்கருத்து அதிர்ச்சியளிக்கின்றது.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளை தோற்கடித்த அதே முறையில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கியதான விசேட படையணியை அமைத்தல் என்பது சட்டச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கொலை என்றே அர்த்தப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் என” சுட்டிக்காட்டியுள்ளது.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7