மாலியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல்களும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.அவர்களுடைய உடல்களை இராணுவ மரியாதையுடன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எம்.பீ. ருவன் விஜயவர்தன ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனர்.
கடந்த 25 ஆம் திகதி அதிகாலையில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையுடன் இணைந்த வகையில் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பயணித்த வாகனமொன்று மாலியின் டுவன்சா பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
இந்த குண்டுத் தாக்குதலில் கெப்டன் எம்.டபிள்யூ.டீ. ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகியோர் உயிர்நீத்தனர். அத்துடன், குறித்த சம்பவத்தில் மேலும் இலங்கை இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.





