LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

எல்லோருக்கும் பதவி ஆசை வந்துள்ளது – பசில் சாடல்

எல்லோருக்கும் பதவி ஆசை வந்துள்ளது. இனிவரும் நாட்களில் அது அம்பலத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து தீர்க்கமான முடிவெடுப்பார்கள்.

இந்நாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் எதுவும் வராமல் தீர்மானம் எடுப்பார்கள்.

விரைவில் எனது அமெரிக்கக் குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகிவிட்டேன்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் அறிவிப்பு வரவில்லை. அதற்கிடையில் அரச தரப்புக்குள்ளும் எதிர்த்தரப்புக்குள்ளும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு – வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தி மக்கள் மனதை வென்றவரே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவார்.

குறித்த வேட்பாளர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது அந்தக் கட்சியின் அனுமதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்“ என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7