LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

அந்நூர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு

                             (முர்ஷீத்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 29வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

 மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா மற்றும் மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக மைதான நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

 விளையாட்டுப் போட்டியின் எட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற இருந்த நிலையில் முதலாவது இடத்தினை றஹ்மத் (நீலம்) இல்லமும், இரண்டாம் இடத்தினை நுஸ்ரத் (பச்சை) இல்லமும், மூன்றாம் இடத்தினை சீனத் (சிவப்பு) இல்லமும் பெற்றுக் கொண்ட நிலையில் எட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்று இருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற காரணத்தை தீர்ப்பாக வைத்து புள்ளிகளின் அடிப்படையில் முதலாவது வந்த இல்லத்திற்கு வழங்க இருந்த நினைவு கேடயத்தினை மூன்று இல்லங்களுக்கும் வழங்கி வைத்தமை சிறப்பம்சமாகும்.
































 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7