(ஜெ.ஜெய்ஷிகன்)
இலங்கையின் 71வது சுதந்திர தினக் கொண்டாட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
செயலக முன்றலில் பிரதான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து பெய்த கனத்த மழை காரணமாக நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வில் பதில் நிருவாக உத்தியோகத்தர் ஆர்.பாஸ்கரன், மற்றும் செயலக உத்தியோகத்தரர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
காலை 83.30 மணிக்கு தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் சுதந்திர தினத்தைக் கொண்டாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதுடன் போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும் பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.















