LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 6, 2019

இந்தியா – மொனாக்கோவிற்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியாவிற்கும் மொனாக்கோவிற்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்திருந்தாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் சந்தித்துப் பேசினார்.

இருதரப்பை சேர்ந்த அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இதன்போது, இரு நாடுகளுக்கு இடையிலான விசா விதிகள் குறித்தும், இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.

மேலும், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7