LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 6, 2019

மீள்குடியேற்ற இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழிலுக்கான நிதியுதவியளித்தல் தொடர்பான செயலமர்வு.


ஐரோப்பிய ஒன்றியம்,யூ.என்.டி.பி.மற்றும் பீஸ் வின்ஸ் யப்பான் ஆகிய நிறுவனங்களின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தின் மீள்குடியமர்த்தப்பட்ட மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி போன்ற பிரதேசங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 53 இளைஞர் யுவதிகளுக்கு வங்கிகளுனுடாக சுயதொழிலுக்கான நிதியுதவியளித்தல் தொடர்பான செயலமர்வு இன்று(6)திருகோணமலை  சர்வோதய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வங்கிகளின் திட்ட பிரச்சார அமர்வு எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியமர்த்தப்பட்ட கிண்ணியா,மூதூர் மற்றும் குச்சவெளி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தெரிவு செய்யப்பட்ட 53 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுக்கு வங்கிகள்  ஊடாக சுயதொழிலுக்கான நிதியுதவிக்கான வழிகாட்டல்கள் மற்றும் சுயதொழிலை இலாபமூட்டும் வகையில் எவ்வாறு மேற்கொள்வது,தொழிலை கையாளும் முறைகள் அத்தோடு வங்களின் செயற்பாடுகள் தொழிலுக்கான முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் யூ.என்.டி.பி.திட்டப்பணிப்பாளர்கே.பார்தீபன்,பீஸ் வின்ஸ் யப்பான் வதிவிட பிரதிநிதி யோகோகவாசி,இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர்பிரபாகரன்,மற்றும் கொமர்ஷல்,இலங்கை வங்கி,செலான் வங்கி,மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் முகாமையாளர்களும் கலந்து கொண்டார்கள்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7