கனடாவின், எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு கனடாவின் வானிலை அவதான நிலையம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி கிரிஸ் சிடிகி, கரோலின் டெய்லர், அரோரா பிரவுன் மற்றும் அல்பேட்டா ஆகிய பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மெட்ரோ வன்கூவர் நகரில் கடுமையான வானிலை நிலவுவதாகவும், அப்பகுதி மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கனடாவின் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி அப்பகுதிகளில் வீசும் கடுங்காற்றுடனான குளிரான காலநிலை இன்றும் நாளையும் நீடிக்கும் என அந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.





