LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பொலிவூட் நடிகை!

மீண்டும் உருவாகும் ‘வர்மா’ திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பொலிவூட் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘ஒக்டோபர்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பனிதா சந்து ‘வர்மா’ திரைப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்திரைப்படம் முடிவடைந்த நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ திரைப்படத்தை கைவிடுவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘வர்மா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ திரைப்படத்தில் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், ‘வர்மா’ திரைப்படத்தை வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் மீண்டும் எடுக்கப் போவதாக கூறி, தயாரிப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அத்தோடு கதாநாயகன் துருவ்வை தவிர, ஏனைய நடிகர் நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7