LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை

விஷால், ராசிகண்ணா நடிப்பில் ஏ.ஆ.ர் முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில், பிரமாண்டமாக போடப்பட்டுள்ள நீதிமன்ற செட்டில் விஷால் 48 மணிநேரம் இடைவிடாது படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமாக போடப்பட்டுள்ள இந்த நீதிமன்ற செட்டில் படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் இந்த படப்பிடிப்பில் ஏனைய  நடிகர்கள் அவரவர் காட்சியில் நடித்துவிட்டு சென்றுவிட்டாலும் விஷாலுடைய காட்சி அடுத்தடுத்து இருப்பதால் இரவு பகல் பாராமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துள்ளார்.

இப்படத்தில், பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு மற்றும் 200இற்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்துள்ள இந்த பிரமாண்ட நீதிமன்ற காட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இப்படத்திற்காக இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7