LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

தலவாக்கலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 தனி வீடுகளைக் கொண்ட ‘பிரான்சிஸ் புரம்’ கிராமம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செலவில் அமைக்கப்பட்ட வீடுகளே பயனாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமார் மற்றும் ‘ட்ரஸ்ட்’ நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி முதலானோர் கலந்து கொண்டார்கள்.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி பொகவந்தலாவையில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது.

மலையகத்தில் திருப்பிச் செலுத்தாத கடன் திட்டம் மூலம் வீடமைப்புத் திட்டங்கள் இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7