சிவகார்த்திகேயனின் 34 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.
வேலைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயான்தாரா நடித்துள்ளார்.
ஹிப் ஹொப் தமிழா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னையிலிருந்து பரிஸிற்குச் செல்லும் கதாநாயகன், அங்கு சந்திக்கும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் கதையாகும்.
நகைச்சுவை, அதிரடி, காதல் உள்ளிட்ட அம்சங்களுடன், திரைப்படங்களுக்கு ஏதுவான அம்சங்களும் ‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இத்திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.






