அடங்கமறு திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் தனிஒருவன் திரைப்பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.அடங்கமறு திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப் ஹொப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கின்றார். இத்திரைப்படம் ஜெயம் ரவியின் 24ஆவது திரைப்படமாகும்.
இத்திரைப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திரைப்படத்தின் இசையமைப்பாளராக தற்போது ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.
மேலும், இத்திரைப்படத்தில் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.





