
தனது உடன்படிக்கை மீறப்படுவதை மொஸ்கோ நிறுத்தவில்லை என்றால், உத்தியோகபூர்வமாக ஆறு மாதங்களுக்குள் முறையாக விலகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார்.
இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை மீறுவதை மறுக்கிற ரஷ்யா, ஒப்பந்தத்தில் இணங்கிக் கொண்டால், அது ஐரோப்பாவில் குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கை நிறுத்துவதைத் தடுக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
