
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அறிக்கை சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு மன்றில் தெரிவித்த அதேவேளை சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
