நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 6:41 மணிக்கு குறித்த தீ விபத்து இடம்பெற்றது. இதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் சுமார் 20 நிமிட போராட்டத்தின் பின்னர், குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் புகை பரவியிருந்தாலும் அக் கட்டிடங்களுக்கு தீ பரவியிருக்கவில்லை என்றும் இந்த சம்பவத்தின் போது எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதற்கும் அதற்கான காரணத்தை தீர்மானிக்கவும் விசாரணையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






