யாழ்ப்பாணத்தில் கைமாற்றவிருந்த கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம், செம்மணி வீதியில் வைத்து இன்று (சனிக்கிழமை) மாலை வத்தராயன் தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 17 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து இவரைக் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள், தாளையடியில் இருந்து, விற்பனை செய்வதற்கு கைமாற்ற முற்பட்ட போதே பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவரை, நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





