LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

பனிப்பொழிவால் உறைந்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த அமெரிக்க பூனை!

அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய குளிர் காற்று காரணமாக அங்கு மனிதர்கள் மாத்திரமன்ற விலங்குகளும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றன.

‘துருவ சுழல்’ எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறியுள்ளது. பனிப் பொழிவின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரச நிறுவனங்கள் செயலிழந்துள்ளன.

பாடசாலைகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உறையவைக்கும் கடுங்குளிரால் பலர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன பூனை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஃபிளஃபி எனும் பெயருடைய பெண் பூனை ஒன்று வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளது, பின்னர் பூனையின் எஜமானர் தீவிரமாக தேடி வந்துள்ளார். பின்னர், அந்த பூனை வீட்டின் அருகில் இருந்த சாலையின் ஓரம் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் வெப்பத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பொதுவாக பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரியாகும். ஆனால் இந்த பூனை -90 டிகிரி அளவிலான வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7