
சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியின் விடுதலை தொடர்பாக சீனா தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ராறியோவில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹுவாவி அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா கனடாவை வலியுறுத்தி வருகிறது. ஆனால், நீதிமன்றச் செயல்முறைகளில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கனேடிய நீதித்துறை அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
