
மேலும், கனேடியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக நேட்டோ கூடுதல் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) முதல் முறையாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை விடுவிக்குமாறு கனடா கோரி வருகின்றது. இந்நிலையில், இது தொடர்பாக சீனா உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கடந்த டிசம்பர் முதலாம் திகதி கனடாவில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இரு கனேடியர்களான முன்னாள் இராஜதந்திரி ஒருவரும், வடகொரியாவிற்கான பயணங்களை திட்டமிடும் ஒருவரும் டிசம்பர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
