
நியூ பிரன்சுவிக் லிபரல் கட்சியின் தலைமைக்கு விக்கர்ஸ் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் தான் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு பார்லிமென்ட் ஹில் தாக்குதலுக்கு முடிவுகட்ட உதவியதற்காக ஒரு கதாநாயகனாக அவர் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் இது தனது ராஜினாமா குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், மார்ச் 2 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் அதன் பின்னர் நியூ பிரன்ஸ்விக் திரும்பவுள்ளார் என்றும் பதிவிட்டார்.
நியூ பிரன்சுவிக் லிபரல் கட்சியின் தலைவரான பிரையன் கல்லன்னை மாற்றுவதற்கு விக்கர்ஸ் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
