
இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதில், பெருமளவு நோயாளர்கள் தமது சிகிச்சைகளுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், அவர்களுக்கு தேவையான காலத்தில் தமக்கான அடிப்படை சுகாதார உதவிகளை அவர்களால் எப்போதும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சமூகப் பராமரிப்பு மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்காக காத்திருக்கும் காலம் மிகவும் அதிகமாக காணப்பட்டதாகவும், அதற்காக நோயாளர்கள் அவசரகால சிகிச்சைப் பிரிவின் பகுதிகளை பாவிக்கும் நிலைமை அதிகரித்து காணப்பட்டதாகவும் அவர் விபரித்துள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில், அவசரகால பகுதிக்கு செல்வோரின் எண்ணிக்கை 11 சதவீதத்தினால் அதிகரித்து, 5.9 மில்லியனைத் தொட்டுள்ளதாகவும், இவ்வாறு அதிக எண்ணிக்கையான காத்திருப்போர் வைத்தியசாலையில் நடமாடுவது, மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பினை பெரிதும் பாதிப்பதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
