
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையில், தாக்கல் செய்யப்பட்ட 2019- 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றை தவிர மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தினையே இடைக்கால வரவு செலவுத்திட்டம் கொண்டுள்ளதாக தினகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இதுவரைக்காலமும் மக்களுக்கு பல இன்னல்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன் சிறு காயங்களுக்கு ஆதரவாகவே வருமானவரி விலக்கு 5 இலட்சம் இந்திய ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழகத்திற்கு என தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லாதமை கவலையளிக்கிறதெனவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
