
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கை பனிப்போர் காலகட்டத்தில் கையெழுத்தானது.
இந்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டங்கள் ஒரு புதிய ஆயுதப் போட்டியின் விளைவாக அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போதே அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிக்க வேண்டும் என கிரெம்ளின் எதிர்பார்க்கின்றது என கூறினார்.
மேலும் வரவிருக்கும் நாட்களில் INF ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க திரும்பப் பெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெறுவதற்கு “மிகவும் வருத்தத்துடன்” எதிர்பார்ப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த ஆண்டு ஒப்பந்தத்தை வெளியேற்றுவதற்கான தனது திட்டங்களை ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
அந்தவகையில் உடன்படிக்கையை காப்பாற்ற மொஸ்கோவுடன் “எந்தவிதமான கணிசமான பேச்சுவார்த்தைகளையும் நடத்த வோஷிங்டன் விரும்பவில்லை” என்று செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
