
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த பெயர் விபரங்களை இன்று (வியாழக்கிழமை) கையளித்துள்ளார்.
இதேவேளை இன்று நாடாளுமன்றில் இது குறித்து வினவப்பட்ட போது, குறித்த பெயர் விபரத்தை இன்னும் ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், ஐக்கிய தேசிய கட்சி குழுவொன்றையும் நியமித்தது.
குறித்த குழு நாளை காலை ரஞ்சன் ராமநாயக்கவிடம் விசாரணை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது
