LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

திருப்பதியில் ராஜபக்ஷ சுவாமி தரிசனம்!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தி ஹிந்து ஊடகம் சார்பில் , பெங்களூரில் கடந்த 9ம் திகதி பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதையடுத்து அவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ரத சப்தமி விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று மாலை பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து, பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் காரில் புறப்பட்டு திருமலைக்குச் சென்றார்.

திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர், தன்னுடைய குழுவினருடன் இன்று அதிகாலை வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, “சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7