LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

தமிழகத்தில் தேர்தலுக்கான கூட்டணி உறுதி: பா.ஜ.க. பொது செயலாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டதாக பா.ஜ.க. பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி விட்டது. மேலும் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்து விட்டது.

இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. அமைத்துள்ள கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7