முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனை கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் சாதனைகளை விளக்கும் வகையிலான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் பழனிசாமியை வாழ்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3-வது ஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்”, என பதிவிட்டுள்ளார்.ளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு






