ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார்.பயங்கரவாதிகளால் புதைத்துவைக்கப்பட்ட குண்டை செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குண்டு வெடித்ததாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியான நவ்ஷேரா செக்டர் பகுதியில் பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை புதைத்து வைத்திருந்தனர்.
இதனை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றனர். இதன்போது குண்டு வெடித்ததில் மேஜர் பதவியிலுள்ள இராணுவ அதிகாரி உயிரிழந்ததாக காஷ்மீர் தகவல் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.





