திருப்பூரைச் சேர்ந்த யாசிகா (வயது 21) சென்னையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை, வடபழனியில் தங்கியிருந்த இவர் பெரும்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவருக்குமிடையில் அண்மையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து யாசிகாவைப் பிரிந்து அவரது காதலர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது
இதையடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தன்னை காதலித்து ஏமாற்றியவருக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுங்கள் என்று தனது தாயாருக்கு வட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து யாசிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், காதல் விவகாரத்தால் யாசிகா தற்கொலை செய்துகொண்டமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






