பாகிஸ்தானில் ஹிந்து கோயில் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவிலுக்குள் நுழைந்த இனந் தெரியாதவர்கள் சிலர் கடவுள் சிலைகளை தாக்கி உடைத்ததுடன், புனித நூல்களையும் தீயிட்டு எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் காயிற்பூரில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஹிந்து மக்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





