உத்தரப் பிரதேசம், முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேய்ச்சலுக்குச் சென்ற 100க்கும் அதிகமான பசுக்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக முசாபர்நகர் கோட்டாட்சியர் விஜய்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“உயிரிழந்த பசுக்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் விஷம் தோய்ந்த புற்களை உண்டதால், அல்லது அங்கு தேங்கியிருந்த ஏதாவது விஷம் கலந்த தண்ணீரை அருந்தியதால் அவை உயிரிழந்திருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு கால்நடை வைத்தியர்கள் உள்ளடங்கலாக விசேட குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பரிசோதனை அறிக்கைகளைப் பொறுத்தே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.






