LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 16, 2019

மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடையில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே திறந்து வைக்கின்றார்கள்.

இன்று மிகவும் மந்தகதியான முறையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்கம் செய்த எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் மக்களால் காண முடியாது.

தற்போதைய அரசாங்கத்தினால் வினைத்திறனான முறையில் செயற்பட முடியாது. இதனை அறிந்து கொண்டே ஜனாதிபதி என்னுடன் இணைந்து கொண்டார்“ என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7