LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

புல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த அமைதிப் பேரணி நடந்தது.

கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாயில் கருப்புத்துணி கட்டியவாறு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7