
குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ரொபிக் பார்க், கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலகட்டத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட ஆதரவை இதன் போது நினைவு கூர்ந்தார்.
மேலும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சந்திப்பில் தினேஷ் குணவர்தன, செஹான் சேமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
