தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரேலோ) இன் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (16) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில்
வட கிழக்கில் இருந்து 257 பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
வட கிழக்கு விடயங்கள் உட்பட ஜெனிவா கூட்டத் தொடர்,
புதிய அரசமைப்பு விடயங்கள் ,அரசியல் கைதிகள் விடுதலை ,காணி விடுவிப்பு ,உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இதில் கட்சி உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
அ . அச்சுதன்






