LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரானுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட தோப்பூர் கள்ளம் பத்தை பத்து வீட்டுத் திட்டத்துக்கு விஜயம் ஒன்றை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

 மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரானுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட  தோப்பூர் கள்ளம் பத்தை பத்து வீட்டுத் திட்டத்துக்கு விஜயம் ஒன்றை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

குறித்த பிரதேசத்துக்கு இன்று (17) விஜயம் செய்த பிரதியமைச்சர் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த 30 வருட  காலமாக ஏற்பட்ட யுத்த சூழ் நிலையின் போது பொது மக்களின் காணிகள் யுத்தத்திற்கு பின்னர் படையினர் வசமானது இதனை கடந்த இரு மாதத்துக்கு முன்பு முன்னால் கிழக்கு ஆளுனர் ரோஹிதவினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டும் எவ்வித அடிப்படை வசதிகளற்றும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக மக்கள் பிரதியமைச்சரிடம் முறையிட்டார்கள்.

உடனடியாக அடிப்படை வசதிக்கான விடயங்களை செய்து தருவதாகவும் மின்சாரம் குடிநீர் மலசலகூட வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.

இக் கள விஜயத்தின் போது பிரதியமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட் , எம்.எம்.மஹ்தி, மற்றும் தோப்பூர் பிரதேச வட்டார வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

அ . அச்சுதன்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7