LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

RUN to Beat Cancer in Srilanka organization UK  மற்றும் CANE அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் GSO அமைப்பின் ஏற்பாட்டில்

மாபெரும் இலவச மருத்துவ முகாம் தி/மூ/கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் 16.02.2019 சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு, பரிசோதனை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, பொதுவான சிகிச்சை, குருதி அழுத்தப் பரிசோதனை, நீரிழிவுப் பரிசோதனை போன்ற பல மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இலவச பஸ் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததோடு நடமாடும் சேவையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட வைத்திய நிபுணர் ரி.சிவகுமார், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட வைத்தியர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டு மக்களுக்கான சேவையை இலவசமாக வழங்கியிருந்தனர். அத்துடன் திருகோணமலை விஜய் நற்பணிமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற உதவியிருந்தனர். நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

அ . அச்சுதன்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7