LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த

போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகர மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்காக மன்னிப்புக் கோரும் வகையில் கருத்துக் கூறியிருந்தார்.

இது இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களை தானே ஒப்புக்கொள்ளும் செயற்பாடாகும். இதன்மூலம் பிரதமர் நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேசத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் பிரதமர் தனது வார்த்தைகளால் போர்க்குற்றம் தொடர்பாக தெளிவாகக் கூறியுள்ளார்.

இது நாட்டினைக் காட்டிக்கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7