LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது: பிரதமர் ரணில்

புதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை மஹிந்த வெளியிட்டு வருகின்றார். ஆனாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர்.

தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதியில் அவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றியிருந்தார்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த செய்த மஹிந்த, எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார்?

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

எனவே, எத்தனைத் தடைகள் வந்தாலும், புதிய அரசியலமப்பினைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடப்போவதில்லை” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7