LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

புதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகள் பலப்படுத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல

புதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகளைப் பலப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர, வடக்கையும் கிழக்கையும் இணைக்க அல்ல என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உரிமையாக இருக்கிறோம். அதேபோல், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சிறுபான்மையினக் கட்சிகள் அனைத்தும், ஒற்றையாட்சிக்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளன.

உண்மையில், இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. நாம் செய்யும் ஒரே விடயம் மாகாணசபைகளை பலப்படுத்துவது மட்டுமே. சிலர், வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்கப்போவதாகக் கூறுகிறார்கள்.

இன்னும் சிலர் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதாகக் கூறுகிறார்கள். இது எல்லாம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும். நாம், இரண்டு தடவைகள் நாட்டின் அரசியலமைப்பை ஸ்தாபித்தோம். இந்தப் பணிகளை அன்று தமிழ்க் கட்சிகள் புறக்கணித்தன.

ஆனால், தற்போது தமிழ்க்கட்சிகள் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும். எனவே, இதனை நாம் வெற்றிகரமாகக் முன்கொண்டுசெல்ல அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7