இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர, பழனி திகாம்பரம், வி.எஸ் ராதாகிருஷ்ணன், திலகராஜ் ஆகியோருடன் பிரதமரின் மேற்பார்வையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, தோட்ட தொழிலாளரின் நாளாந்த சம்பளத்தை, வரவு செலவு திட்டத்தில் அதிகரிப்பதுடன், பெப்ரவரி மாதம் முதல் அதிகரித்த சம்பளம் கணக்கிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர்கள், உள்ளக பங்காளர்களாகும் புது தொழில் முறைமையை நோக்கி பெருந்தோட்ட துறை, முழுமையான மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





