LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

யாழ். வீராங்கனைகள் உள்ளிட்ட 12 பேருக்கு வீடு அன்பளிப்பு!

2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் உள்பட 12 வீராங்கனைகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின் அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் சம்பியன் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள்  கையளிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சிங்கப்பூரில் ஆசிய சம்பியன்ஷிப் வலைபந்தாட்டத் தொடர் நடைபெற்றது. இறுதிப் போட்டி சிங்­கப்­பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் செப்ரெம்பர் 9ஆம் திகதி நடைபெற்றது.

இதில் இலங்கை அணி 69 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.

இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றனர். ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், எழிலேந்தினி ஆகிய இருவர் இடம்பெற்றனர்.

தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7